புதுச்சேரி

கோப்பு படம்

ஆன்லைன் விளையாட்டில் வாலிபரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி

Published On 2022-11-25 08:38 GMT   |   Update On 2022-11-25 08:38 GMT
  • ஆன்லைன் விளை யாட்டில் பரிசு விழுந்ததாக கூறி வாலிபரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
  • இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போனில் ஆன்லைன் விளைாயாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

புதுச்சேரி:

ஆன்லைன் விளை யாட்டில் பரிசு விழுந்ததாக கூறி வாலிபரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

புதுவை தவளக்குப்பம் பூரணாங்குப்பம் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது35). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போனில் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது அந்த விளையாட்டில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சுரேஷ் ஆன்லைன் மூலம் பதில் அளித்தார். சில நாட்கள் கழித்து அவருக்கு கூரியர் மூலம் ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சலில் ஒரு கார்டும், ஒரு விண்ணப்பமும் இருந்தது. அந்த கார்டை சர்ச் செய்து பார்த்ததில் ஆன்லைன் விளையாட்டு மூலம் ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள கார் பரிசு விழுந்துள்ளதாகவும், அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்புமாறு கூறப்பட்டிருந்தது.

அதன்படி அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சுரேஷ் அனுப்பி வைத்தார். அதன் பிறகு அவருக்கு செல்போனில் மெசேஜ் வந்தது. அதில் கார் பரிசை பெற வேண்டுமானால் சர்வீஸ் கட்டணமாக ரூ.6 ஆயிரத்து 250 செலுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

அதன்படி சுரேஷ் அந்த தொகையை ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்தார். அன்றைய தினமே சுரேசுக்கு செல்போனில் மேலும் ஒரு மெசேஜ் வந்தது. அதில் ஜி.எஸ்.டி. கட்டணமாக ரூ.18 ஆயிரத்து 750 கட்டணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

அந்த தொகையையும் சுரேஷ் ஆன் லைன் மூலம் செலுத்தினார். இதனை தொடர்ந்து டி.டி.எஸ். வரிக்கு ரூ.31 ஆயிரத்து 718 கட்ட வேண்டும் என்று மெசேஜ் வந்ததின் அடிப்படையில் அந்த தொகைகையும் சுரேஷ் அனுப்பி வைத்தார்.

பின்னர் அதே நாளில் ரூ.49 ஆயிரத்து 500 கட்ட வேண்டும் என்று செல்போனில் மெசேஜ் வந்தால் சுரேஷ் அதிர்ச்சியடைந்தார். பணம் மோசடி செய்யப்படுவதை அறிந்து சுதாரித்துக்கொண்ட சுரேஷ் மேசேஜ் அனுப்பிய எண்ணில் தொடர்பு கொண்ட போது கார் பரிசுக்கான 98 சதவீத பணிகள் முடிந்து விட்டது என கூறி அந்த செல்போன் எண் இணைப்பை துண்டித்து விட்டார்.

அதன்பிறகு அந்த எண்ணில் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதால் ஏமாற்றமடைந்த சுரேஷ் இதுகுறித்து தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News