புதுச்சேரி
அதிகாரியிடம் கென்னடி எம்.எல்.ஏ. மனு அளித்த காட்சி.
சாலைகளை சீரமைக்க வேண்டும்-அதிகாரியிடம் கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
- உப்பளம் தொகுதிக்குட் பட்ட அம்பேத்கார் சாலை, சுப்பையா சாலை, காந்தி வீதி, ஆம்பூர் சாலை ஆகிய இடங்களில் ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளது.
- சாலையாக அமைத்து தருகிறோம் என்று அதிகாரிகள் எம்.எல்.ஏ.விடம் உறுதி அளித்தனர்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்குட் பட்ட அம்பேத்கார் சாலை, சுப்பையா சாலை, காந்தி வீதி, ஆம்பூர் சாலை ஆகிய இடங்களில் ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளது.
இதனை சரிசெய்ய வேண்டுமென உப்பளம் தொகுதி கென்னடி எம்.எல்.ஏ. பொதுப்பணி துறை செயற்பொறியாளர் வல்லவனை சந்தித்து வலியுறுத்தினார்.
இதனை இன்று இரவே சீர் செய்து தருகிறோம், பின்னர் புத்தாண்டு பண்டிகை முடிந்த பின் தார் சாலையாக அமைத்து தருகிறோம் என்று அதிகாரிகள் எம்.எல்.ஏ.விடம் உறுதி அளித்தனர்.
இதில் உதவி பொறியாளர் பார்த்தசாரதி, உதவி பொறியாளர் பன்னீர், மாநில தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி, மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர்கள் காலப்பன் மற்றும் ராகேஷ் கவுதமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.