புதுச்சேரி

கென்னடி எம்.எல்.ஏ. சாலை சீரமைப்பு பணியை தொடங்கி வைத்த காட்சி.

சாலை சீரமைப்பு பணி-கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2023-03-05 04:47 GMT   |   Update On 2023-03-05 04:47 GMT
  • சாலைகளை சீரமைக்க தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.16 லட்சம் ஒதுக்கப்பட்டது.
  • ஊழியர்களிடம் சாலை அமைக்கும் பணியை விரைவாக முடித்து தரும் படி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்தார்.

புதுச்சேரி:

புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகர் 1-வது தெரு மற்றும் அசோகன் வீதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக இருந்தன.

இந்த சாலைகளை சீரமைக்க தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.16 லட்சம் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து நகராட்சி மூலம் சைடு வாய்க்கால்கள் சீரமைக்கப்பட்ட நிலையில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

இப்பணியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பார்வை யிட்டார். மேலும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் சாலை அமைக்கும் பணியை விரைவாக முடித்து தரும் படி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்தார்.

அப்போது நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் பிரபாகரன், இளநிலை பொறியாளர் சண்முக சுந்தரம், தி.மு.க. கிளை செயலாளர்கள் செல்வம் காளப்பன், இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி, மீனவரணி துணை அமைப்பாளர் விநாயக மூர்த்தி மற்றும் பொது மக்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News