புதுச்சேரி

புதுவையில் நடந்த பா.ஜனதா செயற்குழுக் கூட்டத்தில் நகர மாவட்டத் தலைவர் அசோக்பாபு எம்.எல்.ஏ. பேசிய போது எடுத்த படம். 

பிரதமர் மோடியை பாராட்டி தீர்மானம்

Published On 2023-02-11 10:15 IST   |   Update On 2023-02-11 10:15:00 IST
  • புதுவை நகர மாவட்ட பா.ஜனதா செயற்குழு கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
  • பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு கூடுதலாக 79 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியதற்கும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரி:

புதுவை நகர மாவட்ட பா.ஜனதா செயற்குழு கூட்டம் தனியார் ஓட்டலில் நடந்தது.

நகர மாவட்டத் தலைவர் அசோக்பாபு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஆனந்த கண்ணன் வரவேற்றார். மாநிலத் தலைவர் சாமிநாதன், அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், ரிச்சர்டு பேசினர்.

மாவட்ட பொறுப்பாளர் ரத்தினவேல் நோக்க உரையாற்றினார்.கட்சியை பலப்படுத்துவது குறித்து மோகன்குமார் பேசினார்.

ஜெயக்குமார், ஆறுமுகம், விஜய் தீர்மானங்கள் வாசித்தனர். கூட்டத்தை விஜயரங்கம் தொகுத்து வழங்கினார்.

கூட்டத்தில் 1.1.2023 முதல், மேலும், ஓராண்டுக்கு உணவு தானியங்களை இலவசமாக வழங்க உத்தரவிட்டதற்கும், பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு கூடுதலாக 79 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியதற்கும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மணிமாறன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News