புதுச்சேரி

திருநங்கைகள் கென்னடி எம்.எல்.ஏ. விடம் கோரிக்கை மனு அளித்த காட்சி.

null

பாண்லே பால் நிலையம் அமைக்க அனுமதி-திருநங்கைகள் கென்னடி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை

Published On 2023-03-17 10:30 IST   |   Update On 2023-03-17 10:44:00 IST
உப்பளம் தொகுதியில் பாண்லே பால் நிலையம் அமைக்க திருநங்ககைள் கென்னடி எம்.எல்.ஏ. விடம் கோரிக்கை மனு அளித்தனர்.

புதுச்சேரி:

உப்பளம் தொகுதியில் பாண்லே பால் நிலையம் அமைக்க திருநங்கைகள் கென்னடி எம்.எல்.ஏ. விடம் கோரிக்கை மனு அளித்தனர்.

புதுவையில் மொத்தம் 206 திருநங்கைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் இவர்களின் வளர்ச்சிக்காக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் அக்னி சிறகுகள் திருநங்கைகள் கூட்டமைப்பு டாக்டர் ஷீத்தல் நாயக் தலைமையில் உருவாக்கப்பட்டு சுய உதவிக் குழுக்கள் இயங்கி கொண்டிருக்கின்றது.

எனவே திருநங்கைகளின் வாழ்வாதார வளர்ச்சி குறித்து அடிப்படை வசதி இல்லாமல் அவதிக்கு உள்ளாகும் திருநங்கைகளின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் வகையில் 3 திருநங்கைகள் ஒன்றிணைந்து சுய தொழில் செய்து வறுமையை போக்கும் விதமாக கடற்கரை சுப்பையா சாலையில் பாண்லே பால் நிலையம் திறப்பதற்கான இடத்திற்கு அனுமதி வேண்டி முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அந்த தொகுதிக்கு உட்பட்ட மதிப்பிற்குரிய எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியிடம் அனுமதி வழங்க கோரி கோரிக்கை மனு முன் வைத்தனர்.

Tags:    

Similar News