சேதராப்பட்டில் நடந்த பட்டினி போராட்டத்தில் ஏ.ஐ.சி.சி.டி.யூ. தேசியத் தலைவர் சங்கர் பேசிய போது எடுத்த படம்.
எல்.அன்ட்.டி தொழிற்சாலையை திறக்க கோரி பட்டினி போராட்டம்
- தொழிலாளர்கள் சங்கத்தினர் தொழிற்சாலையை திறக்க கோரி சேதராப்பட்டு பெட்ரோல் பங்க் அருகே பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- கடந்த ஓராண்டாக தொழிற்சாலை இயங்காமல் மூடி கிடக்கிறது.
புதுச்சேரி:
சேதராப்பட்டு எல்.அன்ட்.டி தொழிற் சாலையில் 250-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தனர். இந்நிலையில் கடந்த ஓராண்டாக தொழிற்சாலை இயங்காமல் மூடி கிடக்கிறது.
தொழிற்சாலையை திறந்து இயக்க கோரி தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில், எல்.அன்ட்.டி ஜனநாயக தொழிலாளர்கள் சங்கத்தினர் தொழிற்சாலையை திறக்க கோரி சேதராப்பட்டு பெட்ரோல் பங்க் அருகே பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எல்.அன்ட். டி ஜனநாயக தொழிலாளர்கள் சங்க தலைவர் மோதிலால் தலைமை தாங்கினார். தொழிற்சங்க நிர்வாகிகள் செல்வம், தினகரன், வீரப்பன், தியாகராஜன், அன்பரசன், அய்யனார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஏ.ஐ.சி. .சி.டி.யு. தேசிய தலைவர் சங்கர், தேசிய துணை தலைவர் பாலசுப்பிரமணியன், ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் தினேஷ் பொன்னையா, நாம் தமிழர் தொழிற்சங்க மாநில செயலாளர் ரமேஷ், ஏ.ஐ.யூ.டி.யூ.சி. மாநில செயலாளர் சிவக்குமார், கம்யூனிஸ்டு (எம்.எல்) தமிழக மாநில செயலாளர் ஆசைத்தம்பி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி முருகையன், மாநில கமிட்டி உறுப்பினர் மல்லிகா, எல்.அன்ட்.டி ஜனநாயக தொழிற்சங்க செயலாளர் பாஸ்கர், சேதராப்பட்டு தொழிற்பேட்டை அனைத்து தொழிற்சங்க பொறுப்பாளர் மோகன்தாஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.