புதுச்சேரி

குடிநீர் குழாய் அமைக்க செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்த காட்சி.

ரூ.45லட்சம் செலவில் குடிநீர் குழாய்கள் மாற்றி அமைப்பு

Published On 2023-02-03 04:06 GMT   |   Update On 2023-02-03 04:06 GMT
  • குருவிநத்தம் கிராமத்தில் ரூ.33 லட்சத்து 94 ஆயிரம் செலவிலும், சோரியங்குப்பம் கிராமத்தில் தேரடி வீதி லட்சுமி நகரில் ரூ.11 லட்சத்து 44 ஆயிரம் செலவில் குடிநீர் குழாய் புதைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.45 லட்சம் ஆகும்.

புதுச்சேரி:

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், ஜல ஜீவன் திட்டத்தின் கீழ் பாகூர் தொகுதிக்குட்பட்ட குருவிநத்தம் கிராமத்தில் ரூ.33 லட்சத்து 94 ஆயிரம் செலவிலும், சோரியங்குப்பம் கிராமத்தில் தேரடி வீதி லட்சுமி நகரில் ரூ.11 லட்சத்து 44 ஆயிரம் செலவில் குடிநீர் குழாய் புதைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான பூமி பூஜை விழா நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.45 லட்சம் ஆகும்.

இந்நிகழ்ச்சியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் முத்துசிவம், இளநிலை பொறியாளர் பிரதீப், தி.மு.க., பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News