புதுச்சேரி

வம்பா கீராப்பாளையத்தில் கற்களை அகற்றும் பணியை கென்னடி எம்.எல்.ஏ. பார்வையிட்ட காட்சி.

கற்கள் அகற்றும் பணி- கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2022-06-11 14:01 IST   |   Update On 2022-06-11 14:01:00 IST
  • வம்பாகீரப்பாளையத்தில் படகுகளுக்கு இடையூறாக உள்ள கற்களை அகற்றும் பணியை கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
  • தெற்குப் புறத்தில் கருங்கற்கள் கொட்டியதால், மீனவர்கள் பாலத்தின் வடக்குப் புறமாக தொழில் செய்து வருகின்றனர்.

புதுச்சேரி:

வம்பாகீரப்பாளையம் பழைய துறைமுகம் பாலத்துக்கு தெற்குப் புறமாக, கட்டுமரம் மூலமாக கடலுக்கு சென்று மீன்பிடித் தொழிலை மீனவர்கள் செய்து வந்தனர். தெற்குப் புறத்தில் கருங்கற்கள் கொட்டியதால், மீனவர்கள் பாலத்தின் வடக்குப் புறமாக தொழில் செய்து வருகின்றனர்.

பாலத்திற்கு வடக்குப் புறம் உள்ள தூண்டில் வளைவானது, தானே புயலில் சரிந்து கடலில் சிதறியதால், மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

படகுகளை நிறுத்தவும், கடலுக்கு செல்லவும் சிரமப்படுவதால், இப்பகுதியில் உள்ள கற்களை அகற்றி கொடுக்கும்படி, தொகுதி எம்.எல்.ஏ., அனிபால் கென்னடியிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து அனிபால் கென்னடியின் முயற்சியால் பொதுப்பணித்துறை மூலமாக கருங்கற்களை அகற்றும் பணி தொடங்கியது. அந்த பணிகளை கென்னடி எம்.எல்.ஏ., பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொகுதி தி.மு.க., செயலாளர் சக்திவேல், அவைத் தலைவர் ரவி, பொருளாளர் சண்முகம், மாநில மீனவர் அணி அமைப்பாளர் தனசேகரன், துணை அமைப்பாளர் விநாயக மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News