புதுச்சேரி
சாலையில் விழுந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரம் அகற்றம்
- கனமழையால் மரம் சாய்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
- மேலும் இதனால் அப்பகுதி மக்களும் பாதிப்புக்குள்ளாகினர்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்குட்பட்ட வாணரப்பேட்டை முருகசாமி தோப்பிற்கு செல்லும் பாதையில் ரயில்வே கேட் அருகாமையில் உள்ள சாலையில் கனமழையால் மரம் சாய்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.மேலும் இதனால் அப்பகுதி மக்களும் பாதிப்புக்குள்ளாகினர்.
இதை அறிந்த உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி தீயணைப்பு வீரர்களுக்கு தெரியபடுத்தி வரவழைத்தார்.
தீயணைப்பு வீரர்கள் சாய்ந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார். இதையடுத்து அப்பகுதி மக்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்த கென்னடி எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
நிகழ்ச்சியின் போது வட்டார காங்கிரஸ் தலைவர் லட்சுமணன், தி.மு.க. கிளை செயலாளர் செந்தில் மற்றும் ராகேஷ் உடன் இருந்தனர்.