ஆலோசனை கூட்டத்தில் அ.ம.மு.க. வடக்கு மாநில இணை செயலாளர் லாவண்யா பேசிய போது எடுத்தபடம்.
விவசாயிகளுக்கு நிவாரணம் -அ.ம.மு.க. வலியுறுத்தல்
- ஒரு நாட்டில் அல்லது மாநிலத்தில் விவசாயிகள் சேற்றில் கால் வைக்கவில்லை ன்றால் நாம் அனைவரும் சோற்றில் கை வைக்க முடியாது என்ற நிலைபாடே உள்ளது.
- எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மக்கள் நலனை உயர்வாக நினைத்து செயல்படும் புதுவை அரசு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.ம.மு.க. வடக்கு மாநில ஆலோசனை கூட்டம் மாநில செயலாளர் சேகர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அ.ம.மு.க. வடக்கு மாநில இணை செயலாளர் லாவண்யா பேசியதாவது:-
ஒரு நாட்டில் அல்லது மாநிலத்தில் விவசாயிகள் சேற்றில் கால் வைக்கவில்லை ன்றால் நாம் அனைவரும் சோற்றில் கை வைக்க முடியாது என்ற நிலைபாடே உள்ளது.
இவ்வாறு இருக்கையில் விவசாயிகள் மற்றும் ஏழை எளிய மக்களின் அன்றாட வாழ்வாதாரம் இழக்கும் தருணத்தில் தற்போது புதுவையில் தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் நடவு செய்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி கொண்டு இருக்கின்றன.
எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மக்கள் நலனை உயர்வாக நினைத்து செயல்படும் புதுவை அரசு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.