புதுச்சேரி

விபத்தில் இறந்த மாணவனுக்கு நியாயம் கேட்டு விழுப்பிரம் சாலையில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்ட காட்சி.

பள்ளி மாணவன் உறவினர்கள்-பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2022-07-14 09:39 GMT   |   Update On 2022-07-14 09:39 GMT
  • பொதுமக்கள் சுமார் 100 பேர் திடீரென விழுப்புரம் சாலையின் குறுக்கே ஆம்புலன்ஸ் மற்றும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாதால் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி

விபத்தில் இறந்து போன சிறுவனுக்கு நியாயம் கேட்டு சிறுவனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 100 பேர் திடீரென விழுப்புரம் சாலையின் குறுக்கே ஆம்புலன்ஸ் மற்றும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையறிந்த ரெட்டியார்பாளையம் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாதால் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

சாலை மறியலில் ஈடுபட்டு வரும் சிறுவனின் உறவினர்கள் இந்த சாலை மிகவும் குறுகியதாக உள்ளதாகவும், போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுவதாகவும், பள்ளிகள் அதிகளவில் உள்ளதாகவும், சாலையை ஆக்கிரமைத்து கடைகள் உள்ளதால் விபத்துகள் அதிகளவில் நடைபெற்று வருகிறது என குற்றம்சாட்டினர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

Tags:    

Similar News