புதுச்சேரி

போலீசாரின் இறுதி கட்ட அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்ற காட்சி.

குடியரசு தின விழா இறுதிகட்ட ஒத்திகை

Published On 2023-01-24 14:47 IST   |   Update On 2023-01-24 14:47:00 IST
  • நாடு முழுவதும் நாளை மறுநாள் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது.
  • கவர்னர் தமிழிசை தேசியக்கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார்.

புதுச்சேரி:

நாடு முழுவதும் நாளை மறுநாள் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது.

 புதுவை கடற்கரை சாலையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் காலை 9.30 மணிக்கு கவர்னர் தமிழிசை தேசியக்கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். தொடர்ந்து அலங்கார வாகனங்கள் ஊர்வலம், மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

குடியரசு தின விழா பாதுகாப்பு பணியில் 400 போலீசாரும், அணி வகுப்பில் 300 போலீசாரும் பங்கேற்கின்றனர்.

இன்று காலை இறுதிகட்ட அணிவகுப்பு ஒத்திகை நடந்தது. ஒத்திகையில் சித்தரிக்கப்பட்ட கவர்னர் முன்பு போலீசார், மாணவர்கள் அணிவகுப்பு நடத்தினர்.

உள்துறை அமை ச்சகத்தின் எச்சரி க்கையை தொடர்ந்து புதுவை முழுவதும் உள்ள விடுதிகள், பஸ்நிலையம், வணிக வளாகம், ரெயில்நிலை யத்தில் போலீசார் ஆய்வு பணியை தொடங்கியுள்ளனர். சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா உத்தரவின்பேரில் தீவிர வாகன சோதனையும் நடக்கிறது.

Tags:    

Similar News