கோப்பு படம்.
ரங்கசாமி பா.ஜனதாவை எதிர்த்து போராட வேண்டும்-நாராயணசாமி அறிவுறுத்தல்
- புதுவை மாநிலம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் மக்கள் சந்திப்பு நடைபயணத்தை காங்கிரசார் நடத்த உள்ளனர்.
- ரங்கசாமி பா.ஜனதா வுடன் கூட்டணி சேர முக்கிய காரணம் மாநில அந்தஸ்து பெறுவதுதான் என, தேர்தல் சமயத்தில் கூறினார்.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் மக்கள் சந்திப்பு நடைபயணத்தை காங்கிரசார் நடத்த உள்ளனர்.
இதற்கான ஆலோச னைக்கூட்டம் வள்ளலார் சாலையில் உள்ள தனியார் மகாலில் நடந்தது. மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம்
எம்.பி. முன்னிலை வகித்த னர். அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் அனுமந்த்ராவ் சிறப்புரையாற்றினார்.
வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கள் கமலகண்ணன், கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், எம்.என்.ஆர். பாலன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
ரங்கசாமி பா.ஜனதா வுடன் கூட்டணி சேர முக்கிய காரணம் மாநில அந்தஸ்து பெறுவதுதான் என, தேர்தல் சமயத்தில் கூறினார். உண்மையில் மாநில அந்தஸ்து பெற ரங்கசாமி நினைத்திருந்தால் ஆட்சியில் அமர்ந்த 6 மாதங்களில் அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்கள், கட்சியினரை சந்தித்து பேசியிருக்க வேண்டும். டெல்லிக்கு சென்று புதுவைக்கு மாநில
அந்தஸ்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி யிருக்க வேண்டும்.
இதில் எதையாவது செய்தாரா? இல்லை. ஆனால் அவருக்கு எப்போது பிரச்சினை வருகிறதோ, கவர்னர் எப்போது கோப்புகளில் கையெழுத்து போடவில்லையோ, அப்போது மாநில அந்தஸ்து பற்றி பேசுகிறார். உண்மையில் புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்றால் பா.ஜனதாவை எதிர்த்து தெருவில் இறங்கி போராட ரங்கசாமிக்கு தைரியம் இருக்கிறதா?
பள்ளிகள், கோவில்கள், குடியிருப்புகள் மத்தியில் ரெஸ்டோ பப், மதுபார்க ளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் 6 மதுபான தொழிற்சாலைகளுக்கும் அனுமதி வழங்கியுள்ளனர். அரசு சொத்துக்கள் தனியார் மயமாக்கும் வேலைகள் நடக்கிறது. இந்த அவலங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தான் புதுவையில் போட்டி யிடவேண்டும். அவரை நாம் அனைவரும் சேர்ந்து வெற்றிபெற செய்ய வேண்டும். புதுவை மாநிலத்தில் அனைத்து கிராமங்களிலும் இந்த பாதையாத்திரையை 2 மாதம் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.