புதுச்சேரி

கோப்பு படம்.

கலாச்சாரத்தை ரங்கசாமி அழித்து வருகிறார்-நாராயணசாமி குற்றச்சாட்டு

Published On 2023-01-27 09:26 GMT   |   Update On 2023-01-27 09:26 GMT
  • நாடு முழுவதும் மாநில காங்கிரசார் பாதயாத்திரை நடத்த ராகுல்காந்தி எம்.பி. அறிவுறுத்தியுள்ளார். இதன்படி பாதயாத்திரை நடத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் சார்பில் நடந்தது.
  • பாதயாத்திரை வாயிலாக மக்கள் குறைகளை ராகுல்காந்தி கேட்டு வருகிறார். வடமாநில ங்களில் இந்துக்கள், முஸ்லிம்களுக்கு இடையே கலவரத்தை உருவாக்கி நாட்டை பிரிக்கும் வேலை நடந்து வருகிறது. இது நிறுத்தப்பட வேண்டும்.

புதுச்சேரி:

நாடு முழுவதும் மாநில காங்கிரசார் பாதயாத்திரை நடத்த ராகுல்காந்தி எம்.பி. அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி பாதயாத்திரை நடத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் சார்பில் நடந்தது.கூட்டத்திற்கு வைத்தியநாதன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி. மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், நிர்வாகிகள் அய்யப்பன், நந்தா கலைவாணன், ராஜா, கோவிந்தராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

பாதயாத்திரை வாயிலாக மக்கள் குறைகளை ராகுல்காந்தி கேட்டு வருகிறார். வடமாநில ங்களில் இந்துக்கள், முஸ்லிம்களுக்கு இடையே கலவரத்தை உருவாக்கி நாட்டை பிரிக்கும் வேலை நடந்து வருகிறது. இது நிறுத்தப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அம்பேத்கர் உருவாக்கும்போது சகோதரத்துவம், தனிமனித சுதந்திரம் ஆகியவற்றை வலியுறுத்தினார். இவை தவிடுபொடியாகி வருகிறது.

மத்திய பா.ஜனதா அரசு தங்களுக்கென தனி சட்டத்தை வகுத்துள்ளது. சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை கட்டுக்குள் வைத்துக்கொண்டு அரசியல்தலைவர்களை பழிவாங்குகிறது. நாமும் பாதயாத்திரை சென்று மக்களை சந்திக்க வேண்டும். மாநில அந்தஸ்து வேண்டும் என முதல்-அமைச்சர் கூறுகிறார், பா.ஜனதா மாநில தலைவர் வேண்டாம் என்கிறார்.

மத்திய அமைச்சர் நிர்மலாசீத்தாராமன், சிறப்பு மாநில அந்தஸ்து போதும் என்கிறார்.

ஆளும் கூட்டணி கட்சிகளிடையே முரண்பாடு உள்ளது. ஊழல் நிறைந்த ரங்கசாமி ஆட்சியை இப்போதுதான் பார்க்கிறோம். அனைத்து முக்கிய சாலைகளிலும் மதுக்கடைகளை திறக்கின்றனர். புதுவை கலாச்சாரத்தையே ரங்கசாமி அழித்து வருகிறார்.

காவல்துறை வேலைவாய்ப்பில் லஞ்சம், பத்திரப்பதிவில் லஞ்சம் என எல்லா இடத்திலும் லஞ்சம் தாண்ட வமாடுகிறது.

ரேஷன்கடைகளை திறக்கவில்லை. பஞ்சாலைகள், கூட்டுறவு ஆலைகள் மூடப்பட்டுள்ளது. மக்களை பற்றி கவலைப்படாத முதல்-அமைச்சராக ரங்கசாமி உள்ளார். லாஸ்பேட்டை தொகுதியில் 2 நாட்கள் பாதயாத்திரையை சிறப்பாக நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News