கோப்பு படம்
- மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு கத்தி குத்து விழுந்தது.
- புதுவை லாஸ்பேட்டை செண்பவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல்
புதுச்சேரி:
மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு கத்தி குத்து விழுந்தது. புதுவை லாஸ்பேட்டை செண்பவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல்(வயது32). கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை.
மது குடிக்கும் பழக்க முள்ள இவர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு மதுக்கடைக்கு மது குடிக்க சென்றார். அங்கு மது குடித்துக்கொண்டிருந்த போது மற்றொரு மேஜையில் அமர்ந்து மது குடித்துக்கொண்டிருந்த மடுவுப்பேட்டையை சேர்ந்த கட்டையன் என்ற வெங்கடேசுக்கும் சக்திவேலுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இருவரும் மாறி மாறி தாக்கி கொண்டனர்.
அப்போது கட்டையன் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியை எடுத்து சக்திவேலுவின் வயிற்றில் சரமாரியாக குத்தி விட்டு தப்பியோடி விட்டார். இதில் படுகாயமடைந்த சக்திவேலை அங்கிருந்த வர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.