கர்லிங் போட்டியில் சாதனை படைத்த வீரர்களை இன்ஸ்பெக்டர் இனியன் வாழ்த்தி பாராட்டிய போது எடுத்தபடம். அருகில் மாஸ்டர் வினோத் உள்ளார்.
புதுவை வீரர்கள் பதக்கம் வென்று சாதனை
- இந்திய தேசிய அளவிலான கர்லிங் போட்டி ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மர்கில் நடைபெற்றது.
- வீரர்களுக்கு இன்ஸ்பெக்டர் இனியன் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.
புதுச்சேரி:
இந்திய தேசிய அளவிலான கர்லிங் போட்டி கடந்த 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மர்கில் நடைபெற்றது. இதில் புதுவை வீரர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் புதுவையை சேர்ந்த ஷினிவாஸ், தேவதர்ஷினி ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தனர். இவர்கள் கர்லிங் சங்க கவுரவ தலைவர் மாஸ்டர் வினோத் தலைமையில் முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். வீரர்களுக்கு இன்ஸ்பெக்டர் இனியன் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.
நிகழ்ச்சியின் போது புதுவை கர்லிங் பயிற்சியாளர்கள் ஹேமா, வசந்த் உடனிருந்தனர். இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை பொருளாளர் ஜெயஸ்டூ செய்திருந்தார்.