புதுச்சேரி

டெல்லியில் நடந்த தேசிய இன் டர்சோனல் மற்றும் சப்-ஜூனியர் கராத்தே போட்டியில் வென்ற புதுவை பாரத் ஆர்கனைஷேசன் அணி மணவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடந்தது.

புதுவை வீரர்கள் சாதனை

Published On 2022-12-11 11:19 IST   |   Update On 2022-12-11 11:19:00 IST
  • கராத்தே இந்திய ஆர்கனைசேஷன் சார்பில் தேசிய இண்டர் சோனல் மற்றும் சப்-ஜூனியர் கராத்தே போட்டி டெல்லியில் நடந்தது.
  • இதில், பாரத் கராத்தே ஆர்கனைசேஷன் ஆப் புதுவை அமைப்பு சார்பில் புதுவை அணியினர் பங்கேற்றனர். இந்த போட்டியில், சாமரன் தங்கப்பதக்கத்தையும், நித்தியபிரதாப் வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்தனர்.

புதுச்சேரி:

கராத்தே இந்திய ஆர்கனைசேஷன் சார்பில் தேசிய இண்டர் சோனல் மற்றும் சப்-ஜூனியர் கராத்தே போட்டி டெல்லியில் நடந்தது.

இதில், பாரத் கராத்தே ஆர்கனைசேஷன் ஆப் புதுவை அமைப்பு சார்பில் புதுவை அணியினர் பங்கேற்றனர். இந்த போட்டியில், சாமரன் தங்கப்பதக்கத்தையும், நித்தியபிரதாப் வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்தனர்.

இவர்களுக்கு, பாரத் கராத்தே ஆர்கனைசேஷன் ஆப் புதுவை சார்பில் சிறப்பானவரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், மூத்த பயிற்சியாளர் ஜோதிமணி, அமைப்பு தலைவர் அழகப்பன், பொது மேலாளர் பாலமுரளி, பொருளாளர் குமரன் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தினர்.

ஆசிய கராத்தே நடுவர் பழனி வேல், துணை செயலாளர் சங்கர், நிர்வாகிகள் தர்மபிரகாஷ், புருஷோத்தமன் உடனிருந்தனர்.

Tags:    

Similar News