புதுச்சேரி

தி.மு.க. எம்.பி. ராசா உருவ படத்தை கிழித்து அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்திய காட்சி.

புதுவை அ.தி.மு.க.வினர் போராட்டம்

Published On 2022-09-17 14:52 IST   |   Update On 2022-09-17 14:52:00 IST
  • இந்து மதத்தை அவமதித்து பேசிய தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து புதுவை அ.தி.மு.க. சார்பில் உப்பளத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • ஆர்ப்பாட்டத்தில் ராசாவை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

புதுச்சேரி:

இந்து மதத்தை அவமதித்து பேசிய தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து புதுவை அ.தி.மு.க. சார்பில் உப்பளத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் நடராஜன், திருநாவுக்கரசு, ரவி பாண்டுரங்கன், அன்பானந்தம், இளங்கோ, நாகமணி, குமுதன், அன்பழக உடையார், கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ராசாவை கண்டித்து கோஷம் எழுப்பினர். மேலும், ராசாவின் உருவ படத்தை கிழித்து அவமதித்தனர்.

அ.தி.மு.க.செயலாளர் அன்பழகன் கூறும்போது,கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக ராசா பேசியிருப்பது தி.மு.க.வின் கொள்கையா.? இதற்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.விற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்தார்.

Tags:    

Similar News