புதுச்சேரி

வேதபுரீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்ற காட்சி.

பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

Published On 2022-06-05 13:46 IST   |   Update On 2022-06-05 13:46:00 IST
  • புதுவை வேதபுரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடைபெற்றது.
  • வேதபுரீஸ்வரர் கோவிலில் 36-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா துர்க்காம்பாள் பூஜையுடன் தொடங்கியது

புதுச்சேரி:

புதுவை காந்தி வீதியில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி சமேத வேதபுரீஸ்வரர் கோவிலில் 36-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா துர்க்காம்பாள் பூஜையுடன் தொடங்கியது இதையொட்டி எல்லையம்மன் பூஜையும், விக்னேஸ்வர பூஜையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து, தினசரி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக வருகிற 9-ந் தேதி காலை திருக்கல்யாண உற்சவமும், வருகிற 13-ந் தேதி காலை தேர் திருவிழா, 15-ந் தேதி திருஞானசம்பந்தர் உற்சவம் நடக்கிறது.

வருகிற 19-ந் தேதி மாலை விடையாற்றி அபிஷேகம், 20-ந் தேதி காலை உற்சவசாந்தி சங்காபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவல் குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News