புதுச்சேரி

முற்போக்கு மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

முற்போக்கு மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-11-16 14:37 IST   |   Update On 2022-11-16 14:37:00 IST
  • விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் சுதேசி மில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் தமிழ்வாணன் தலைமை வகித்தார்.
  • மருத்துவ கல்வியில் புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

புதுச்சேரி:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் சுதேசி மில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் தமிழ்வாணன் தலைமை வகித்தார். துணை செயலாளர் தொல்காப்பியன் வரவேற்றார். நிர்வாகிகள் ஆதிரை, உதயபாஸ்கர், சிவசந்திரன், அமுதகுமார், கல்யாணசுந்தரம், பாவலன், அனுசியா, விக்னராஜ் முன்னிலை வகித்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவபொழிலன் கண்டன உரையாற்றினார். மாநில செயலாளர் இளவரசன், தமிழக மாணவர் கழக துணை செயலாளர் நீதிவள்ளல், பல்வேறு அமைப்பு நிர்வாகிககள் மணிமாறன், எழிலன், கல்யாணசுந்தரம், பிரவீன், ராகுல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மருத்துவ கல்வியில் புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களிடம் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். கட்டணமில்லா கல்வி திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.

மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசுக்கு பெற வேண்டும். நிகழ்நிலை பல்கலைக்கழகங்கள் மீதும் நடவடிக்கை எடுக்காத பா.ஜனதா அரசு, கூட்டணி வகிக்கும் என்.ஆர்.காங்கிரசை கண்டித்து இந்த போராட்டம் நடந்தது.

Tags:    

Similar News