பேராசிரியர் சங்க கூட்டமைப்பினர் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்
பேராசிரியர் சங்க கூட்டமைப்பு பாராட்டு
- அரசு உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஒப்பந்த உதவி பேராசிரியர்களுக்கு சம்பள உயர்வாக ரூ.25 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் உயர்த்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
- புதுவை அரசு உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் அண்ணா ஜெகன் தலைமையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர் நமச்சிவாயத்துக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை அரசு உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஒப்பந்த உதவி பேராசிரியர்களுக்கு சம்பள உயர்வாக ரூ.25 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் உயர்த்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து புதுவை அரசு உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் அண்ணா ஜெகன் தலைமையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர் நமச்சிவாயத்துக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்தனர். மேலும் தற்போது 6 மாத காலம் மட்டுமே பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ச்சியாக கல்வி ஆண்டு முழுவதற்கும் பணி ஆணை வழங்கும்படி முதல்-அமைச்சரையும்,கல்வி அமைச்சரையும் கேட்டுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் துணை தலைவர்கள் பார்த்திபன், விஜயசுபாஷினி, செயலாளர் சிவகாமசுந்தரி, பொருளாளர் சண்முகவேல் மற்றும் நிர்வாகிகள் பொன்முத்து சரவணன், சுகந்தியா, மலையன், தயாநிதி, உதயகுமார், சபா மைதிலி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.