புதுச்சேரி

தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம். 

அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஊர்வலம்

Published On 2022-10-18 15:17 IST   |   Update On 2022-10-18 15:17:00 IST
  • புதுவை அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களுக்கு தீபாவளி உதவித்தொகை ரூ.5000 வழங்க வேண்டும்.
  • ஊர்வலத்தை துணைத் தலைவர் முருகன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி:

புதுவை அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களுக்கு தீபாவளி உதவித்தொகை ரூ.5000 வழங்க வேண்டும்.

அமைப்புசாரா நல வாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பன கோரிக்கையை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அவர்கள் சட்டமன்றம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. பிரதேச தலைவர் பிரபுராஜ் தலைமை தாங்கினார். முன்னதாக காமராஜர் சிலை அருகே ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தை துணைத் தலைவர் .முருகன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலம் சட்டமன்றம் அருகில் நிறைவடைந்து அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தை ஆட்டோ சங்க கௌரவ தலைவர் முருகன் முடித்து வைத்து பேசினார். சிஐடியு பிரதேச செயலாளர் சீனிவாசன், நிர்வாகிகள் ஜீவானந்தம், மணவாளன் ,விஜயகுமார் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் இதில் பங்கேற்றனர் போராட்டத்தின் இறுதியில் முதல் -மைச்சர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

Tags:    

Similar News