புதுச்சேரி

வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு செல்வகணபதி எம்.பி. பரிசுகள் வழங்கிய காட்சி.

வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் செல்வகணபதி எம்.பி. வழங்கினார்

Published On 2022-10-22 13:32 IST   |   Update On 2022-10-22 13:32:00 IST
  • ஓவியப்போட்டி, கட்டுரை போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
  • போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா விவேகானந்தா பள்ளியில் நடந்தது.

புதுச்சேரி:

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் சார்பில் அசோடிகா அமிர்த் மகோத்சவம் (சுதந்திர தேன் விழா) சார்பில் பள்ளி மாண வர்களுக்கிடையே பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரை போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா விவேகானந்தா பள்ளியில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினரா க செல்வகணபதி எம். பி., சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிர்வாக அதிகாரிகள் அரவிந்த்குமார், அரவிந்த் நாத்ஜா ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 25 மாணவ-மாணவிகளுக்கு விருதுகள் மற்றும் பரிசுகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் பள்ளியின் முதன்மை முதல்வர் பத்மா, முதல்வர் கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொது மேலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News