புதுச்சேரி

கைபந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் பரிசு வழங்கினார். 

கைப்பந்து போட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு - நமச்சிவாயம் வழங்கினார்

Published On 2022-06-13 14:35 IST   |   Update On 2022-06-13 14:35:00 IST
  • கைப்பந்து போட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் பரிசுகளை வழங்கினார்
  • கொம்பாக்கத்தில் பிரதர்ஸ் விளையாட்டு கழகம் நடத்திய கைப்பந்து போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் என மொத்தம் 35 அணிகள் விளையாடினர்.

புதுச்சேரி:

வில்லியனூர் தொகுதி கொம்பாக்கத்தில் பிரதர்ஸ் விளையாட்டு கழகம் நடத்திய கைப்பந்து போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் என மொத்தம் 35 அணிகள் விளையாடினர்.

இதன் இறுதி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார். ஆண்கள் பிரிவில் முதல்பரிசை கருவாடிகுப்பம் ஸ்பைடர் அணியும், 2-ம் பரிசை அரியாங்குப்பம் பாரதிதாசன் அணியும், 3-ம் பரிசை கொம் பாக்கம் பிரதர்ஸ் அணியும், 4-ம் பரிசை தர்மாபுரி ஜாலி பிரன்ட்ஸ் அணியும் பெற்றன.

பெண்கள் பிரிவில் முதல் பரிசை புதுவை நரேந்திரா அணியும், 2-ம் பரிசை கருவடிக்குப்பம் ஸ்பைடர் அணியும், 3-ம் பரிசை சிவந்தி கிளப் அணியும், 4-ம் பரிசை கொம்பாக்கம் பிரதர்ஸ் அணியும் பெற்றன.

விழா ஏற்பாடுகளை விளையாட்டு கழக செயலாளர் காந்தி, கழக தலைவர் சிவசங்கரன், துணை செயலாளர் வினோத், பொருளாளர் திரவியராஜ், ஒருங்கிணைப்பாளர் தேஸ், உறுப்பினர் சராசந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News