புதுச்சேரி

வெற்றி பெற்ற அணிக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பரிசு கோப்பை வழங்கிய காட்சி.

கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு-சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்

Published On 2023-01-11 13:42 IST   |   Update On 2023-01-11 13:42:00 IST
  • புதுச்சேரி மாநில அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் சார்பில் சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் மற்றும் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டி லாஸ்பேட்டையில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
  • இந்த கபடி போட்டிக்கான ஏற்பாடுகளை அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் நிர்வாகிகள் டாக்டர் உதயச்சந்திரன், ஸ்ரீதேவி, பீமாராவ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி மாநில அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் சார்பில் சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் மற்றும் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டி லாஸ்பேட்டையில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இந்த கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் சபாநாயகர் ஏம்பம் செல்வம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கோப்பை மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியி வி.பி. ராமலிங்கம் தாகூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் சத்திகாந்த தாஸ், பா.ஜனதா கூட்டுறவு பிரிவு மாநில அமைப்பாளர் வெற்றி செல்வம், விஷ்வ ஹிந்து பரிஷத் வேல்முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த கபடி போட்டிக்கான ஏற்பாடுகளை அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் நிர்வாகிகள் டாக்டர் உதயச்சந்திரன், ஸ்ரீதேவி, பீமாராவ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags:    

Similar News