புதுச்சேரி

கோப்பு படம்.

மின்துறை தனியார் மய நடவடிக்கையை புதுவை அரசு கைவிட வேண்டும்- கம்யூனிஸ்டு வலியுறுத்தல்

Published On 2022-12-22 10:26 IST   |   Update On 2022-12-22 10:26:00 IST
  • மத்திய மின்துறை மந்திரி ஆர்.கே. சிங் பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் தற்போது எந்தவொரு அரசுக்கு சொந்தமான விநியோக உரிமையையும் தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை.
  • ரூ.30 ஆயிரம் கோடி புதுவை மக்களின் சொத்தை தனியார் முதலாளிகள் கொள்ளை அடிப்பதற்கு ஏஜெண்ட் வேலை செய்ய கூடாது.

புதுச்சேரி:

மார்க்சிஸ்ட்டு கம்யூனி ஸ்ட்டு மாநில செயலாளர் ராஜாங்கம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய மின்துறை மந்திரி ஆர்.கே. சிங் பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் தற்போது எந்தவொரு அரசுக்கு சொந்தமான விநியோக உரிமையையும் தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை. அவை முந்தையதைப் போலவே செயல்படும் எந்தவொரு சொத்து அல்லது நெட்வொர்க்கின் உரிமையையும் மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறி உள்ளார்.

மத்திய அரசே எந்த ஒரு மாநில மின் விநியோக த்துறையும் தனியார் மயமாக்க போவது இல்லை என்று அறிவித்துள்ள நிலையில் புதுவையை ஆளும் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு உடனடியாக புதுவை மின்துறை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.

ரூ.30 ஆயிரம் கோடி புதுவை மக்களின் சொத்தை தனியார் முதலாளிகள் கொள்ளை அடிப்பதற்கு ஏஜெண்ட் வேலை செய்ய கூடாது. தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக பல்வேறு பொய்களை நீதிமன்றத்தில் தெரிவித்து எப்படியாவது மின்துறையை விற்க வேண்டும் என்று செயல்ப டும் தலைமைச் செயலாளர், மின்துறை செயலர் மற்றும் சில மின்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ராஜாங்கம் அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News