கோப்பு படம்.
தனியார் கம்பெனி தொழிலாளி தற்கொலை
- பண்ருட்டியை அடுத்த மாளிகம்பட்டு அருகே தாழம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித்.
- இவர் புதுவை கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் என்ஜினியரிங் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
புதுச்சேரி:
பண்ருட்டியை அடுத்த மாளிகம்பட்டு அருகே தாழம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் இவர் புதுவை கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் என்ஜினியரிங் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும் 2 வயதில் குழந்தையும் உள்ளனர்.
ரஞ்சித்தின் மனைவி பாக்கியலட்சுமி பிள்ளையார்குப்பத்தில் உள்ள மகாத்மாகாந்தி மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வருகிறார். கணவன்-மனைவி இருவரும் ஒரே பகுதியில் வேலைக்கு செல்வதால் கிருமாம்பாக்கத்தில் வாடகை வீட்டில் தங்கி வசித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி ரஞ்சித் தனது மனைவியை தீபாவளியை தனது சொந்த ஊரில் கொண்டாடலாம் என்று அழைத்துள்ளார். ஆனால் பாக்கியலட்சுமி வரமறுத்து மருத்துவமனையில் தொடர்ந்து பணி இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதில் மனமுடைந்து தீபாவளியை சிறப்பாக கொண்டாட முடியவில்லை என்ற எக்கத்தில் ரஞ்சித் அப்பகுதியில் பூச்சிக்கொல்லி மருந்து (விஷம்) வாங்கி மதுவுடன் கலந்து குடித்தாக கூறப்படுகிறது.
பின்னர் இதுபற்றி ரஞ்சித் தனது மனைவியிடம் விஷம் குடித்து விட்டதாக தெரிவித்தார். உடனே அவரது மனைவி தான் வேலை செய்த மருத்துவமனைக்கு கணவரை அழைத்துச் சென்று சிகிச்சைக்கு அனுமதித்தார்.
இந்த நிலையில் ரஞ்சித் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இருந்தார். இதுசம்பந்தமாக கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ஏட்டு அம்பேத்கர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.