புதுச்சேரி

கோப்பு படம்.

டெங்கு காய்ச்சல் உயிரிழப்பை தடுக்க வேண்டும்

Published On 2023-09-14 08:43 GMT   |   Update On 2023-09-14 08:43 GMT
  • கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
  • சுகாதாரத் துறையில் மோசமான சூழல் நிலவுகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

புதுச்சேரி:

புதுவை மாநில தி.மு.க. துணை அமைப்பாளர் கென்னடி எம்.எல்.ஏ. வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி மாநிலத்தில் டெங்கு காய்ச்சலால் 2 பெண்கள் மருத்துவ மனையில் அனுமதிக்க ப்பட்டு உயிர் இழந்து உள்ளனர். இது சுகாதாரத் துறையில் மோசமான சூழல் நிலவுகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

அது மட்டுமல்லாமல் கேரளாவில் தற்போது நிபா வைரஸ் தொற்று காய்ச்சல் ஏற்பட்டு 2 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

புதுவையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கி ழமைகளில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கேரளா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகின்றனர். இவர்களால் புதுவை மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் புதுவை அரசின் சுகாதாரத்துறை உடனடி யாக புதுச்சேரி பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற முக்கிய இடங்களில் ஆய்வு பரிசோதனையை மேற்கொண்டு, புதுச்சேரி மக்களுக்கு உரிய பாதுகாப்பினை அளித்திட வேண்டும்.

நிபா வைரஸ் புதுவையில் வராமல் இருக்க முதல்-அமைச்சர் ரங்கசாமி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலம் நெருங்க இருப்பதால் டெங்கு மற்றும் சிக்குன் குனியா காய்ச்சல் ஏற்படு வதற்கு முன்பு தாலுகா வாரியாக சுகாதாரத்துறை ஊழியர்கள், பொதுப்ப ணித்துறை ஊழியர்கள், உள்ளாட்சித் துறை ஊழியர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள் அடங்கிய சுகாதார நலனை கவனிக்கும் வண்ணம் குழுக்களை ஏற்படுத்த வேண்டும்.

புதுச்சேரி சுகாதாரத்துறை கர்ப்பிணி பெண்களுக்கும் குழந்தை களுக்கும் ஊட்டச்சத்து மாத்திரை அளிக்கப்பட்டு வருவதில் காலாவதி ஆன மாத்திரைகள் வழங்கப்பட்ட தால் சுகாதார ஊழியர் ஒருவர் மட்டும் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு ஒருவர் மட்டும் காரணம் இல்லை. இம்மாதிரி சம்பவங்கள் நடைபெறும் போது துறை ரீதியான விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News