புதுச்சேரி

103 முறை ரத்ததானம் செய்த வெற்றிச்செல்வனுக்கு சேவா ரத்னா விருதை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கிய காட்சி.

null

ஜோதி சிலம்பம் குருகுலத்தில் முப்பெரும் விழா

Published On 2023-02-27 11:47 IST   |   Update On 2023-02-27 14:49:00 IST
  • பூரணாங்குப்பத்தில் உள்ள ஜோதி சிலம்பம் குருகுலத்தில் நடந்த விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
  • குழந்தைகள் அமைப்பின் செயலாளர் ஜெகநாதன், ஆதரவற்றவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்த சந்திரகுரு ஆகியோருக்கு சேவா ரத்னா விருது வழங்கப்பட்டது.

புதுச்சேரி:

புதுவை அரசு கலை மாமணி விருதாளர் சங்கம் சார்பில், நாட்டிய கலை விழா, தாய்மொழி தினம், சேவை நிறுவன தினம் ஆகியவை முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.

பூரணாங்குப்பத்தில் உள்ள ஜோதி சிலம்பம் குருகுலத்தில் நடந்த விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நாட்டிய கலை ரத்னா, சேவை ரத்னா, தாய்மொழி ரத்னா ஆகிய விருதுகளை வழங்கினார்.

முன்னதாக, தமிழ்வாணன் வரவேற்றார். ஜோதி செந்தில் கண்ணன் முன்னிலை வகித்தார். விசித்ரா தலைமை தாங்கினார்.

ஓவியர் அரியபுத்திரி, சுவாமிதாசன், சரவணன், ரவி, சகாதேவன், ராஜாராம், நெல்லை, ராஜன், பேராசிரியர் சிவக்குமார், தட்சிணாமுர்த்தி ஆகியோர் வாழ்த்தி பேசினார்.

விழாவில், 103 முறை ரத்ததானம் செய்த வெற்றிச்செல்வம், உயிர்த்துளி அமைப்பின் நிறுவனர் பிரபு, குழந்தைகள் அமைப்பின் செயலாளர் ஜெகநாதன், ஆதரவற்றவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்த சந்திரகுரு ஆகியோருக்கு சேவா ரத்னா விருது வழங்கப்பட்டது.

வேலு ஞானமூர்த்தி, ரேகா ராஜா ஆகியோருக்கு தாய்மொழி ரத்னா விருதையும், பக்தன், சாத்வீக காயத்திரி ஆகியோருக்கு நாட்டிய ரத்னா விருதையும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்.

Tags:    

Similar News