பிம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்ற பொங்கல் விழா விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி முதல்வர் அனில்பூர்த்தி பரிசு வழங்கிய காட்சி.
- தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் முதன்முறையாக ஊழியர்கள் பங்கேற்ற சிறப்பு கோலப்போட்டி மற்றும் உறியடி நடைபெற்றது.
- ஆண் பெண் ஊழியர்கள் பங்கேற்ற உறியடியில் 30-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு 8 பேர் உறியடித்து பானையை உடைத்தனர்.
புதுச்சேரி:
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் முதன்முறையாக ஊழியர்கள் பங்கேற்ற சிறப்பு கோலப்போட்டி மற்றும் உறியடி நடைபெற்றது.
இதில் ஆர்வமுடன் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.கோலப்போட்டியில் 5 பேர் கொண்ட குழுவாக 50-க்கும் மேற்பட்ட குழுவினர் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் கோலங்கள் போட்டு பாரம்பரிய உடையுடன் மண்பானையில் பொங்கல் இட்டனர்.
ஆண் பெண் ஊழியர்கள் பங்கேற்ற உறியடியில் 30-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு 8 பேர் உறியடித்து பானையை உடைத்தனர். முடிவில் நடந்த பரிசளிப்பு விழாவில் கோலப்போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி, மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன், செவிலியர் கல்லூரி முதல்வர் மோனி, ஜோபி ஜார்ஜ் ஆகியோர் முதல் பரிசு 5 ஆயிரம், இரண்டாம் பரிசாக 4 ஆயிரம், மூன்றாம் பரிசு 3 ஆயிரம் வழங்கினர். உறியடியில் வெற்றி பெற்றவர்களுக்கு தலா 1000 வழங்கப்பட்டது.
முடிவில் அனைத்து கல்லூரி ஊழியர்களுக்கும் கரும்பு வழங்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிம்ஸ் மருத்துவ கல்லூரி பூண்டிருந்தது.