புதுச்சேரி

கோப்பு படம்.

காலாப்பட்டு தொழிற்சாலை, கிராமங்களில் போலீஸ் பாதுகாப்பு

Published On 2023-11-06 09:35 GMT   |   Update On 2023-11-06 09:35 GMT
  • தொழிலாளர் நலன் குறித்து விசாரணை
  • தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில் தொழிலாளர் துறையின் தொழிலக ஆய்வக பிரிவு அதிகாரி முரளி தலை மையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

புதுச்சேரி:

புதுவை காலாப்பட்டில் உள்ள தனியார் மருந்து கம்பெனியில் பாய்லர்கள் வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டது.

இதில் 14 தொழிலாளர்கள் உடல் கருகி படுகாயமடைந்தனர். இவர்களில் 11 பேர் சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் உயர்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த சம்பவம் காரணமாக காலாப்பட்டு பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு ள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில் தொழிலாளர் துறையின் தொழிலக ஆய்வக பிரிவு அதிகாரி முரளி தலை மையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தீ விபத்து நடந்த ரெக்கவரி யூனிட், டிரை யூனிட் பகுதிகளில் தடயங்களை சேகரித்து ஆய்வகத்துக்கு கொண்டு சென்றனர். இதன்பின்னர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்த அதிகாரிகள், விபத்து குறித்து விளக்கி ஆய்வறி க்கையை ஒப்படைத்தனர்.

இதையடுத்து அந்த தொழிற்சாலையில் மருந்து உற்பத்திக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையாணை நோட்டீஸ் கம்பெனியின் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் விபத்து ஏற்படாமல் இருப்பதற்கான வழிமுறைகள் குறித்து நிபுணர்களை கொண்டு ஆராயவும் புதுவை அரசு உத்தரவிட்டுள்ளது.

தீ விபத்து தொடர் பாகவும், தொழிலாளர் பாதுகாப்பு குறித்து கவர்னர், முதல்-அமைச்சர் ஆகியோர் உயர்மட்ட விசாரணைக்கும் உத்தர விட்டுள்ளனர். தொழிற்சாலை பாதுகாப்பு தொடர்பாக விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் தொழிற்சாலையை நடத்த அனுமதியளிப்பது குறித்து அரசு முடிவு செய்யும். இதனிடையே காலாபட்டில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.இதனால் தொழிற்சாலை முன்பும், சுற்றுப்புற கிராமங்களிலும் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.

Tags:    

Similar News