காட்டுக்குப்பம் பகுதியில் போக்குவரத்து போலீசாருடன் ஆட்டோ டிரைவர்கள் இருவழி சாலை அமைக்க பேரிகாடுகளை அமைத்து அமைத்தனர்.
கடலூர்-புதுவை சாலையை இருவழி பாதையாக மாற்ற போலீசார் ஏற்பாடு
- கடலூர - புதுவை மெயின் ரோட்டில் தொடர்ந்து விபத்து ஏற்படுவதை தடுக்க தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- சாலையில் ஏற்றுப்பட்டுள்ள பள்ளங்களை அவ்வப்போது தற்காலிக ஏற்பாடுகளும் செய்து வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை தெற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் கணே–சன் தலைமையில் அரியாங்குப்பத்திலிருந்து முள்ளோடை வரை உள்ள கடலூர - புதுவை மெயின் ரோட்டில் தொடர்ந்து விபத்து ஏற்படுவதை தடுக்க தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பல இடங்களில் தன்னார்வலர்களின் உதவியோடு தடுப்பு கட்டைகளும், பேரிகார்டு, எச்சரிக்கை பலகைகள் வைத்து வருகின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளும் சாலையில் ஏற்றுப்பட்டுள்ள பள்ளங்களை அவ்வப்போது தற்காலிக ஏற்பாடுகளும் செய்து வருகின்றனர்.
போக்குவரத்து போலீசாரால் பல இடங்களில் இரு வழி சாலையாக மாற்றப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் காட்டுக்குப்பத்திலிருந்து கன்னியகோவில் வரை உள்ள சாலையையும் இரு வழி சாலையாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
அதனை தொடர்ந்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் இருவழி சாலையாக மாற்ற பேரிகார்டு மற்றும் சிவப்பு வண்ணம் பூசிய பேரல்கள் வைத்து மாற்றியுள்ளனர்.
இவை சுமார் 500மீட்டருக்கு வைக்கப்பட்டு உள்ளது. ேமலும் புதுநகர் பகுதியிலும் இருவழி சாலையாக மாற்ற அப்பகுதி மக்கள் போக்குவரத்து போலீசாருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.