மறியலில் ஈடுபட்ட பொது மக்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்திய காட்சி.
மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
- சேதராப்பட்டில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேதராப்பட்டு பகுதியில் 10 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட்டது.
- போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதின் மூலம் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.
புதுச்சேரி:
மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேதராப்பட்டு பகுதியில் 10 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட்டது. பிறகு 5 மணிக்கு மின்சாரம் வழங்கப்பட்டு 5.10 வரை மின்சாரம் இருந்தது.மீண்டும் 5.10 மணி முதல் 8.15 வரை 3 மணிநேரத்திற்கு மேலாக அறிவிக்கப்படாத மின்வெட்டு செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் குடிநீர் வினியோகம் பெற முடியாமல் தவித்தனர்.
இதனை கண்டித்து சேதராப்பட்டு மந்தைவெளி பகுதியில் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 45 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதின் மூலம் போக்குவரத்து சரி செய்யப்பட்டது. தினந்தோறும் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளதால் மின்துறை அதிகாரிகளும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.
இதனை ஏற்றுக்கொண்ட போலீசார் பொதுமக்கள் மற்றும் மின்துறை அதிகாரி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று உத்தரவாதம் அளித்ததின் மூலம் சாலைமறியல் கைவிடப்பட்டது.