புதுச்சேரி

ஏ.ஐ.டி.யூ.சி. பாசிக் ஊழியர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்த காட்சி.

பாசிக் மதுக்கடைகளை மீண்டும் திறக்க வேண்டும்- ஊழியர்கள் சங்கம் தீர்மானம்

Published On 2022-07-03 13:47 IST   |   Update On 2022-07-03 13:47:00 IST
  • ஏ.ஐ.டி.யூ.சி. பாசிக் ஊழியர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் கூட்டம் பாக்கமுடையான்பட்டு காரல் மார்க்ஸ் படிப்பகத்தில் நடந்தது.
  • நடைபெற்ற வேலைகள் சம்பந்தமாக பாசிக் சங்க செயலாளர்.முத்துராமனும், எதிர்கால செயல்பாடுகள் குறித்து ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வமும் பேசினார்.

புதுச்சேரி:

ஏ.ஐ.டி.யூ.சி. பாசிக் ஊழியர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் கூட்டம் பாக்கமுடையான்பட்டு காரல் மார்க்ஸ் படிப்பகத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு பாசிக் சங்க பொருளாளர் தரணிராஜன் தலைமை வகித்தார்.நடைபெற்ற வேலைகள் சம்பந்தமாக பாசிக் சங்க செயலாளர்.முத்துராமனும், எதிர்கால செயல்பாடுகள் குறித்து ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வமும் பேசினார்.

பாசிக் சங்க நிர்வாகிகள் மூர்த்தி, சூரி, மகேந்திரன், மணிகண்ணு ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

பாண்லே நிறுவனம் தனியார் நிறுவன மினரல் வாட்டர் விற்பனை செய்வதை நிறுத்தி பாசிக் மினரல் வாட்டர் விற்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாசிக் மதுபான கடைகளை மீண்டும் திறந்து கேண்டீன்களை லாபம் வரும் வகையில் குத்தகைக்கு விட வேண்டும். பாசிக் தொழிலாளர்கள் நிலுவை சம்பளத்தை முழுமையாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News