பாப்ஸ்கோ ஊழியர்கள் சட்டசபை அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
பாப்ஸ்கோ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- புதுவை பாப்ஸ்கோ ஊழியர்கள்(ஏ.ஐ.டி.யூ.சி.) சங்கம் சார்பில் சட்டசபை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயல் தலைவர் அபிஷேகம், மாநில தலைவர் தினேஷ் பொன்னையா கண்டன உரையாற்றினர்.
புதுச்சேரி:
புதுவை பாப்ஸ்கோ ஊழியர்கள்(ஏ.ஐ.டி.யூ.சி.) சங்கம் சார்பில் சட்டசபை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார். பாப்ஸ்கோ ஊழியர் நல சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் மோகன், நிர்வாகிகள் குணா, கோவர்த்தனன், பிரபு, ஏழுமலை, அமுதா, சரஸ்வதி, அமுதவல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயல் தலைவர் அபிஷேகம், மாநில தலைவர் தினேஷ் பொன்னையா கண்டன உரையாற்றினர். பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய 55 மாதமாக சம்பளத்தை வழங்க வேண்டும். தீபாவளி பஜார் நடத்திய மானியம் ரூ.65 லட்சத்தை வழங்க வேண்டும்.
பாப்ஸ்கோ ரேஷன்கடை களுக்கு வழங்க வேண்டிய 6 ஆண்டு வாடகை ரூ.1.30 கோடியை வழங்க வேண்டும். அரிசி விநியோகம் செய்ய நிர்ணயிக்கப்பட்ட கூடுதல் விலையை வழங்க வேண்டும். பொங்கல் பொருட்கள் வழங்கியதற்கு கமிஷன் தொகை ரூ.31 லட்சம் வழங்க வேண்டும்.
பணி ஓய்வில் சென்ற தொழிலாளர்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கி ஓய்வு கால பண பலன்களை அளிக்க வேண்டும். பாப்ஸ்கோ நிறுவனத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து தொழிலாளர்கள் அனைவருக்கும் வேலை வழங்கி மாதம் தவறாமல் சம்பளம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாப்ஸ்கோ மதுபான கடைகளை தனியாருக்கு குத்தகை விட்டு, ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கி, மற்றும் நிறுவனத்தை திறந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.