புதுச்சேரி

கட்சி கொடியை தமிழக பா.ஜனதா மாநில துணைத் தலைவர் ஏ.ஜி.சம்பத் ஏற்றி வைத்த காட்சி.

பா.ஜனதா கொடியேற்று விழா-1000 பேருக்கு அன்னதானம்

Published On 2022-08-04 13:54 IST   |   Update On 2022-08-04 13:54:00 IST
  • திருச்சிற்றம்பலம் கூட் ரோட்டில் பா.ஜனதா கட்சி கொடியேற்று விழா நிகழ்ச்சி நடந்தது.
  • இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பா.ஜனதா மாநில துணைத்தலைவர் ஏ.ஜி சம்பத் கலந்து கொண்டு கட்சி கொடியினை ஏற்றி வைத்தார்.

புதுச்சேரி:

திருச்சிற்றம்பலம் கூட் ரோட்டில் பா.ஜனதா கட்சி கொடியேற்று விழா நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பா.ஜனதா மாநில துணைத்தலைவர் ஏ.ஜி சம்பத் கலந்து கொண்டு கட்சி கொடியினை ஏற்றி வைத்தார். விழுப்புரம் மாவட்ட பா.ஜனதா பொதுச் செயலாளர் ஜி.கே ராஜன் தலைமையில் நடந்த நிகழ்ச்சிக்கு, உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து, திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வரசிக்தி விநாயகர் கோவிலில் பிரதமர் மோடி, தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஆகியோர் நீடுழி வாழ சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு நிகழ்ச்சியும், ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு 1000பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

பின்னர் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு படையாட்சி காம்ப்ளக்ஸில் ஜி.கே.ஆர். அலுவலக திறப்பு விழாவில் பா.ஜனதா மாநில துணைத்தலைவர் ஏ.ஜி சம்பத் தலைமையேற்று அலுவலகத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.

அப்போது விழுப்புரம் மாவட்ட பா.ஜனதா பொது செயலாளராக நியமிக்கப்பட்ட ஜி.கே ராஜனுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். சிவனடியார் தங்கமணி தலைமையில் ஓதுவார்கள் கலந்து கொண்டு திருவாசக வாழ்த்து பாடல் பாடினர்.

இந்த நிகழ்ச்சிகளில் மாநில, மாவட்ட ,ஒன்றிய பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் பா.ஜனதா பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News