புதுச்சேரி

முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த காட்சி.

வன்னிய பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

Published On 2023-01-02 13:19 IST   |   Update On 2023-01-02 13:19:00 IST
  • புதுவை முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வார் திருமஞ்சனம் மற்றும் வைகுண்ட ஏகாதசி தினத்தையொட்டி பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு தரிசனம் மிக சிறப்பாக நடைபெறும்.
  • விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.

புதுச்சேரி:

புதுவை முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வார் திருமஞ்சனம் மற்றும் வைகுண்ட ஏகாதசி தினத்தையொட்டி பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு தரிசனம் மிக சிறப்பாக நடைபெறும்.

அதுபோல் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி தினத்தையொட்டி 4 மணிக்கு திருப்பாவையும், 5.30 மணிக்கு பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.6 மணிக்கு துவாதசி தரிசனமும், 11-ந் தேதி இராப்பத்து சாற்றுமறை உற்சவமும், கூடார வள்ளி ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News