புதுச்சேரி

திருக்காமீஸ்வரர் கோவில் தேரில் சக்கரம் மற்றும் அச்சு பொருத்துவதற்கு முன்பாக நடந்த சிறப்பு பூஜையில் எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

திருக்காமீஸ்வரர் கோவில் விநாயகர் தேருக்கு புதிய இரும்பு சக்கரம்

Published On 2022-06-10 14:48 IST   |   Update On 2022-06-10 14:48:00 IST
  • திருக்காமீஸ்வரர் கோவில் விநாயகர் தேருக்கு புதிய இரும்பு சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது.
  • திருக்காமீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா

புதுச்சேரி:

புதுவை வில்லியனூர் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாளை (11-ந் தேதி) தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி, கடந்த சில வாரங்களுக்கு முன், விநாயகர், அம்மன், திருக்காமீஸ்வரர் ஆகிய 3 தேர்களின் உறுதித்தன்மை குறித்து திருச்சி பெல் நிறுவன பொறியாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் விநாயகர் தேரில் பழுதாகி இருந்த மர சக்கரத்தை சரிசெய்ய குழு பரிந்துரைத்தது. சிவா எம்.எல்.ஏ. விநாயகர் தேருக்கு இரும்பு சக்கரத்தை தனது செலவில் அமைத்து தருவதாக தெரிவித்தார்.

அதன்படி, ரூ.3 லட்சம் செலவில், 3 டன் எடையில் இரு அச்சுகள் மற்றும் 4 சக்கரங்கள் திருச்சி பெல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு, நேற்று மாலை கோவிலுக்கு வந்தது.

சிவா எம்.எல்.ஏ. முன்னிலையில் புதிய சக்கரத்திற்கு பூஜை செய்து, கரிக்கோலம் நடந்தது. கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன், முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் மண்ணாங்கட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News