புதுச்சேரி

புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடந்த என்ஜினீயர் தின விழாவில் சுற்றுச்சூழல் துறை சீனியர் பொறியாளர் ரமேஷ்சுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்ட காட்சி.

தேசிய என்ஜினீயர் தின விழா

Published On 2022-09-16 06:30 GMT   |   Update On 2022-09-16 06:30 GMT
  • செப்டம்பர் மாதம் 15-ந் தேதி பொறியாளர் பாரத் ரத்னா விஸ்வேஸ்வரய்யா பிறந்த தினத்தை தேசிய பொறியாளர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • சிறப்பு விருந்தினராக புதுவை அரசு சுற்றுச் சூழல் துறை சீனியர் பொறியாளர் ரமேஷ் கலந்து கொண்டு "சமூக வளர்ச்சியில் பொறியாளர்களின் பங்கு" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர்.

புதுச்சேரி:

செப்டம்பர் மாதம் 15-ந் தேதி பொறியாளர் பாரத் ரத்னா விஸ்வேஸ்வரய்யா பிறந்த தினத்தை தேசிய பொறியாளர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதுபோல புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தேசிய என்ஜினீயர் தின விழா கொண்டாடப்பட்டது.

இப்பல்கலைக்கழகத்தில் சிறப்பான உலகிற்கு சிறந்த பொறியாளர்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு சிவில் பொறியியல் பிரிவு தலைவர் பழனிவேல் வரவேற்றார். பேராசிரியர் சரவணன் நோக்க உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக புதுவை அரசு சுற்றுச் சூழல் துறை சீனியர் பொறியாளர் ரமேஷ் கலந்து கொண்டு "சமூக வளர்ச்சியில் பொறியாளர்களின் பங்கு" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர்.

ரமேஷ்சுக்கு பல்கலைக்கழகம் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் பொறியாளர் குமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News