புதுச்சேரி

கோப்பு படம்

ரங்கசாமி மீது நாராயணசாமி கடும் குற்றச்சாட்டு

Update: 2022-06-26 08:35 GMT
  • பல மாநிலங்களில் ஆட்சி மாற்றத்தைச் செய்த பா.ஜனதா அதே முறையை மகா ராஷ்டிராவில் செய்கிறது.
  • சிவசேனா கட்சியானது, கட்சி மாறிகளை ஓடஓட விரட்டுவோம் என்று தெரிவித்துள்ளன.

புதுச்சேரி:

புதுவை முன்னாள் முதல் - அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

பல மாநிலங்களில் ஆட்சி மாற்றத்தைச் செய்த பா.ஜனதா அதே முறையை மகா ராஷ்டிராவில் செய்கிறது. சிவசேனா கட்சியானது, கட்சி மாறிகளை ஓடஓட விரட்டுவோம் என்று தெரிவித்துள்ளன.கட்சி மாறிகளால்தான் இந்திய அரசியல் தூய்மை இழந்துள்ளது.

கடந்த ஓராண்டில் 35 மத்திய மந்திரி புதுவைக்கு வந்துள்ளார்கள். அவர்க ளால் புதுவைக்கு ஒரு பைசா கொண்டு வர முடிந்ததா? குடுகுடுப்பைக் காரனை போல் புதுவைக்கு நல்ல காலம் பிறப்பதாக கவர்னர் கூறுகிறார். எங்கே நல்ல காலம் வருகிறது. நான் முதல்-அமைச்சராக இருந்தபோது மத்திய அரசிடமிருந்து கூடுதலாக 10 சதவீதம் நிதியை பெற்றேன். ஆனால், ரங்கசாமியால் கூடுதலாக 1.56 சதவீதம் நிதி தான் பெற முடிந்துள்ளது.

மத்தியிலும், மாநிலத்திலும் சீர்கெட்ட நிர்வாகம் நடக்கிறது. ஜிப்மரை கவனிக்காத மத்திய அரசால் புதுவையில் எப்படி வளர்ச்சியை கொண்டுவர முடியும். கிரண்பேடி காலத்தில் மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கப்படுகிறது.

புதுவையில் நிலம் சம்பந்தமான பிரச்னைகளில் முடிவு எடுக்கின்ற அதிகாரம் அமைச்சரவைக்கு உண்டு. பட்டா மாற்றும் அதிகாரம், நிலத்தை மற்றவர்களுக்கு கொடுக்கும் அதிகாரம், உபரி நிலத்தை நில உரிமையாளரிடம் பெற்று ஏழைகளுக்கு கொடுக்கும் அதிகாரம், பல ஆண்டுகளாக ஒரு இடத்தில் குடியிருப்பவருக்கு அந்த சொத்தை அவருக்கு உரிமை படுத்தி கொடுக்கும் அதிகாரம் என்று 4 சட்டங்கள் அமலில் உள்ளன.

புதுவையில் பொது சொத்துக்கள் நிறைய உள்ளன. எனக்கு கிடைத்த தகவல் படி பொது சொத்துகளை தனியாருக்கு தாரைவார்த்து கொடு ப்பதற்காக கவர்னருக்கு நில அதிகாரத்தை கொடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சேதராப்பட்டில் உள்ள 800 ஏக்கர் நிலம் மற்றும் பொதுத்துறை சொத்துகளை கபளீகரம் செய்யும் வேலை நடந்து வருகிறது.

முதல்-அமைச்சர் தனது அதிகாரத்தை கவர்னரிடம் விட்டு கொடுத்துவிட்டார். கவர்னர் சூப்பர் முதல்-அமைச்சராகவும், ரங்கசாமி டம்மி முதல்- அமைச்சராக வும் இருப்பதாக நான் கூறியது நிரூபணமாகியுள்ளது.

புதுவையில் ஒரு இன்ச் நிலத்தை கூட தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதை நாங்கள் ஒரு போதும் ஏற்க மாட்டோம். இதனை எதிர்த்து போராடுவோம். புதுவை மக்களின் சொத்தை யாராவது கபளீகரம் செய்ய நினைத்தால் அவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

Tags:    

Similar News