புதுச்சேரி

நமோ கிரிக்கெட் 2023 போட்டிக்கான கோப்பையை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர் நமச்சிவாயம், வி.பி. ராமலிங்கம் எம்.எல்.ஏ. மற்றும் பா.ஜனதா இளைஞர் அணியினர் அறிமுகம் செய்து வைத்த காட்சி.

நமோ கிரிக்கெட் 2023 கோப்பை அறிமுகம்

Published On 2023-01-19 14:46 IST   |   Update On 2023-01-19 14:46:00 IST
  • புதுவை பா.ஜனதா சார்பில் நமோ கிரிக்கெட் 2023 போட்டி தொடங்கி 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.
  • பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் கிரிக்கெட் கோப்பையை அறிமுகம் செய்து குலுக்கல் முறையில் விளையாட்டு அணியை தேர்வு செய்தனர்.

புதுச்சேரி:

புதுவை பா.ஜனதா சார்பில் நமோ கிரிக்கெட் 2023 போட்டி தொடங்கி 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் கிரிக்கெட் கோப்பை அறிமுக நிகழ்ச்சி நடந்தது. பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் கிரிக்கெட் கோப்பையை அறிமுகம் செய்து குலுக்கல் முறையில் விளையாட்டு அணியை தேர்வு செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் பா.ஜனதா இளைஞரணி துணைத் தலைவர்கள் உமாசங்கர், ராக் பெடரிக், மாநில செயலாளர்கள் அஸ்வின்குமார், அமல்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்குமரன் மாநில வணிகர் பிரிவு இணை அமைப்பாளர் சீனிவாசப்பெருமாள், ஓ.பி.சி. அணி மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணராஜ், உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News