புதுச்சேரி

மூலநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கிய போது எடுத்தப்படம்.

மூலநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா

Published On 2022-07-04 14:39 IST   |   Update On 2022-07-04 14:39:00 IST
  • பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது.
  • இக்கோவிலில், ஆண்டு தோறும் ஆனி மாதம் 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறும்.

புதுச்சேரி:

பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது.இக்கோவிலில், ஆண்டு தோறும் ஆனி மாதம் 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறும்.

இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு, மாலை 6 மணிக்கு கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, பிடாரி அம்மன் குதிரை வாகன வீதியுலா நடந்தது.

காலை 5 மணிக்கு, பாலவிநாயகர், மூலநாதர், வேதாம்பிகை அம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 6 மணிக்கு கொடி மரத்திற்கு கலச அபிஷேகமும், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடந்தது.

இதில், அறங்காவலர் குழு தலைவர் முத்துராமன், துணை தலைவர் சக்திவேல், செயலாளர் காத்தவராயன், பொருளாளர் பிரபு, நிர்வாக அதிகாரி பாலமுருகன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில், தினமும், யானை, குதிரை, நாகம் உள்ளிட்ட வாகனங்களில் சாமி வீதியுலா நடக்கிறது.

வருகிற 10-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும், தேர் திருவிழா 12-ந் தேதி நடக்கிறது. 13-ந் தேதி முருகன் வள்ளி தெய்வானை தெப்ப உற்சவமும், 14-ந் தேதி 63 நாயன்மார்கள் உற்சவமும் நடக்கிறது.

Tags:    

Similar News