புதுச்சேரி

தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்ற காட்சி.

தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Published On 2023-07-07 05:37 GMT   |   Update On 2023-07-07 05:37 GMT
  • மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றம் மேலாண் இயக்குனருமான தனசேகரன் தலைமை தாங்கினார்.
  • முதுகலை கணினித் துறைத் தலைவர் ராமலிங்கம் மற்றும் பேராசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோரின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

புதுச்சேரி:

புதுவை, மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியுடன் ஹட்டுஸா ஐ.டி. சொல்யூஷன்ஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து எம்.சி.ஏ. மற்றும் பி.டெக் மாணவர்களுக்கு மேம்பட்ட மென்பொருள் திறன் அறிவு பயிற்சி மற்றும் ேவலைவாய்ப்பிற்காக கூட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தக்ஷஷீலா பல்கலைக்கழத்தின் வேந்தரும், மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றம் மேலாண் இயக்குனருமான தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஹட்டுஸா ஐ.டி. ெசால்யூஷன்ஸ் நிறுவனத்தின் மேலாளர் சீனுவாசன், மூத்த மென்பொருள் யூசர் இன்டர்பேஸ் டிசைனர் பாலாஜி, கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வர் டாக்டர் வெங்கடாசலபதி ஆகியோர் கூட்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

கல்லூரியின் பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், ேதர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகடாமி டீன்கள் அன்புமலர் மற்றும் அறிவழகர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் டீன் வேல்முருகன் வேலைவாய்ப்புத் துறை அதிகாரிகள் கைலாசம் மற்றும் மதுசூதனன், முதுகலை கணினித் துறைத் தலைவர் ராமலிங்கம் மற்றும் பேராசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோரின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

Tags:    

Similar News