புதுச்சேரி

எம்.ஐ.டி. கல்லூரி வில்லேஜ் டெக்னாலஜி ஸ்கூல் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட காட்சி.

null

எம்.ஐ.டி.கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

Published On 2022-10-26 09:59 IST   |   Update On 2022-10-26 12:07:00 IST
  • புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, வில்லேஜ் டெக்னாலஜி ஸ்கூல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
  • அனைத்து துறைத்தலை வர்கள், கல்லூரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி ெஜயக்குமார், கல்லூரி ரோபோட்டிக்ஸ் அன்ட் ஆட்டோமேஷன் துறை தலைவர் ரேணுகா தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, வில்லேஜ் டெக்னாலஜி ஸ்கூல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

அனைத்து துறைத்தலை வர்கள், கல்லூரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி ெஜயக்குமார், கல்லூரி ரோபோட்டிக்ஸ் அன்ட் ஆட்டோமேஷன் துறை தலைவர் ரேணுகா தேவி உள்பட பலர் முன்னிலையில் எம்.ஐ.டி.கல்லூரி முதல்வர் மலர்க்கண் மற்றும் வில்லேஜ் டெக்னாலஜி ஸ்கூல் முதன்மை செயல் அதிகாரி பாலாஜி மற்றும் சி.ஓ.ஓ. பாலாஜி வரதன் ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பரிமாறிக்கொண்டனர்.

Tags:    

Similar News