புதுவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஆய்வு கூட்டம் நடத்த வந்த அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமாரை அதிகாரிகள் வரவேற்ற காட்சி.
அதிகாரிகளுடன் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் ஆய்வு கூட்டம்
- உணவு தரகட்டுப்பாட்டு துறையின் மூலம் அங்கீகார சான்றிதழ் பெற்று "நெய்தல்" என்ற பெயரில் விற்பனை செய்கின்றனர்.
- பெண்கள் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் என அனைத்து வயதினரும் உட்கொள்ளக்கூடிய ஒரு உணவாகும்.
புதுச்சேரி:
குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவண ன்குமார் தலைமையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் இயங்கும் அனைத்து திட்டங்களின் வளர்ச்சி குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:-
ஊரக வாழ்வாதார இயக்ககத்தின் கீழ் செயல்படும் உணவு, ஊட்டச்சத்துக்கள், ஆரோக்கியம் மற்றும் சுத்தம் திட்டத்தின் மூலம் அரியாங்குப்பம், வில்லி யனூர், காரைக்கால் ஆகிய மூன்று வட்டாரங்களில் உள்ள 40 சுய உதவிக்குழு கிராமப்புறபெண்களுக்கு, தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் மூலம் 3 நாட்கள் பயிற்சி பெற்று தற்பொழுது அவர்களை தொழில் குழுக்களாக மாற்றி முறையாக உணவு தரகட்டுப்பாட்டு துறையின் மூலம் அங்கீகார சான்றிதழ் பெற்று "நெய்தல்" என்ற பெயரில் விற்பனை செய்கின்றனர்.
மக்கள் அனைவரும் சிறுதானிய உணவை அதிகமாக பயன்படுத்த வேண்டும். ஊட்டச்சத்து குறைப்பாட்டை போக்க இது மிகவும் பயனுள்ள ஒரு பொருளாக திகழ்கின்றது.
அனைத்து வயதினரும் சிறுதானிய உணவை உட்கொ ள்ளலாம். பெரும்பாலும் கர்ப்பிணி பெண்கள் பாலூட்டும் தாய்மார்கள் பெண்கள் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் என அனைத்து வயதினரும் உட்கொள்ளக்கூடிய ஒரு உணவாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அரசு செயலர் நெடுஞ்செழியன், திட்ட இயக்குனர் சத்தியமூர்த்தி, ஊரக வளர்ச்சித்துறை, மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.