புதுச்சேரி

புதுவை காந்தி சிலை எதிரில் நடந்த சாராஸ் கைவினை பொருள் கண்காட்சியில் அதிக விற்பனை செய்த பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் விருது வழங்கிய காட்சி.

மத்திய அரசு வழங்கும் நிதியை முழுமையாக செலவிடுகிறார்-அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் பெருமிதம்

Published On 2023-03-28 11:35 IST   |   Update On 2023-03-28 11:35:00 IST
  • புதுவை காந்தி சிலை எதிரே இந்திய ஊரக வளர்ச்சி முகமை மற்றும் புதுவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து 'சாராஸ்' கைவினைப் பொருள் கண்காட்சி நடைபெற்றது.
  • கிராம புற மக்களின் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து பிரதமர் மோடி திட்டங்களை வழங்கி வருகிறார்.

புதுச்சேரி:

புதுவை காந்தி சிலை எதிரே இந்திய ஊரக வளர்ச்சி முகமை மற்றும் புதுவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து 'சாராஸ்' கைவினைப் பொருள் கண்காட்சி கடந்த 17-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடந்து நிறைவடைந்தது.

நடந்த நிறைவு விழா நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில், கைவினைப் பொருட்கள் விற்பனையில் கோவா மாநிலத்தைச் சேர்ந்த கைவினை கலைஞர்கள் அமைத்த அரங்கில் அதிகப்படியான விற்பனை நடந்து முதலிடத்தையும், உத்தர பிரதேசம் 2-ம் இடத்தையும், மகாராஷ்டிரா மாநிலம் 3-ம் இடத்தையும், ஆந்திரா 4-வது இடத்தையும் பிடித்து விற்பனையில் சாதனை படைத்தது.

விற்பனையில் சாதனை படைத்த அனைவருக்கும் விருது மற்றும் சான்றிதழ் வழங்கி அமைச்சர் பேசுகையில், பிரதமர் மோடி பதவி ஏற்றது முதல் கிராமப்புற மக்களின் மேம்பாடு குறித்து அவரது ஒவ்வொரு திட்டமும் கிராமத்தை நோக்கியே உள்ளது. கிராமப்புற உள்கட்டமைப்பு கிராம புற மக்களின் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து பிரதமர் மோடி திட்டங்களை வழங்கி வருகிறார்.

மத்திய அரசு வழங்கும் ஒவ்வொரு நிதியையும் புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பொது மக்களுக்கு முழுமையாக செலவிட வேண்டும் என்ற ஆசையோடு உள்ளார். இவ்வாறு பேசினார். இதில், இளநிலை பொறியாளர் ராமன், வில்லியனூர் வட்டார வளர்ச்சி அதிகாரி வைசாக் பாகி, அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி இணை அதிகாரி லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News