புதுச்சேரி

மீன்வளத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆலோசனை நடத்திய காட்சி.

அதிகாரிகளுடன் அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆலோசனை

Published On 2023-06-24 11:24 IST   |   Update On 2023-06-24 11:24:00 IST
  • மத்திய அரசு திட்டங்களில் பயனடைய உள்ள புதுவை மீனவர்கள் பற்றிய விபரங்களை வைத்திருக்க உத்தரவிட்டார்.
  • கிசான் கடன் அட்டை வழங்கும் திட்டத்தையும் மத்திய மந்திரி முருகன் தொடங்கி வைக்கிறார்.

புதுச்சேரி:

மத்திய இணை மந்திரி முருகன் வருகிற 29-ந் தேதி புதுவைக்கு வருகிறார்.மீன்வளத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

இதுதொடர்பாக அமைச்சர் லட்சுமி நாராயணன் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார்.

அப்போது மத்திய அரசு திட்டங்களில் பயனடைய உள்ள புதுவை மீனவர்கள் பற்றிய விபரங்களை வைத்திருக்க உத்தரவிட்டார்.

விவசாயிகள் தங்களுக்கு தேவையான பூர்த்தி செய்த கிசான் கடன் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. மீனவர்களும்இந்த அப்டையை பயன் படுத்தலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி ரூ.20 ஆயிரம் வரை பயன்படுத்தலாம்.

வருகிற 29-ந் தேதி கிசான் கடன் அட்டை வழங்கும் திட்டத்தையும் மத்திய மந்திரி முருகன் தொடங்கி வைக்கிறார்.

Tags:    

Similar News