புதுச்சேரி

கோப்பு படம்.

மத்திய குழுவினருடன் அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆலோசனை

Published On 2023-02-02 10:37 IST   |   Update On 2023-02-02 10:37:00 IST
  • புதுவையில் வெள்ள பாதிப்பை தவிர்க்க அனைத்து நீர்நிலைகளையும் புனரமைக்க ரூ.378 கோடியே 50 லட்சம் வேண்டும் என மத்திய ஜல் சக்தி துறையிடம் அமைச்சர் லட்சுமிநாராயணன் கோரியிருந்தார்.
  • மழை காலங்களில் வீடூர் அணையில் வெளி யேற்றப்படும் தண்ணீரால் நோணாங்குப்பம், சுண்ணாம்பாறு பகுதியில் வெள்ளப்பெருக்கை தடுக்க 21 கி.மீ. கரையில் சாலை வசதி செய்ய வேண்டும்.

புதுச்சேரி:

புதுவையில் வெள்ள பாதிப்பை தவிர்க்க அனைத்து நீர்நிலைகளையும் புனரமைக்க ரூ.378 கோடியே 50 லட்சம் வேண்டும் என மத்திய ஜல் சக்தி துறையிடம் அமைச்சர் லட்சுமிநாராயணன் கோரியிருந்தார்.

இதை பரிசீலித்த மத்திய அமைச்சகம், மத்திய நீர்வள ஆணைய சேர்மன் அபிஷேக்சின்கா, பொறியாளர் தங்கமணி ஆகியோர் தலைமையில் துணை இயக்குனர்கள் பன்னீர்செல்வம், தர்மேந்திரசிங் கொண்ட மத்திய நீர் ஆணைய நிபுணர் குழுவை அமைத்தது.

இந்த குழுவினர் புதுவைக்கு வந்து சட்டசபையில் அமைச்சர் லட்சுமி நாராயணனுடன் நீர்மேலாண்மை குறித்து ஆலோசனை நடத்தினர். புதுவையில் சாத்தியமான இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும். ஆறுகளில் கரையை 2 மீட்டர் உயர்த்த வேண்டும்.

மழை காலங்களில் வீடூர் அணையில் வெளி யேற்றப்படும் தண்ணீரால் நோணாங்குப்பம், சுண்ணாம்பாறு பகுதியில் வெள்ளப்பெருக்கை தடுக்க 21 கி.மீ. கரையில் சாலை வசதி செய்ய வேண்டும். ஆறு, குளங்களின் கரைகளை பலப்படுத்தி சாத்தனூர் அணையிலிருந்து புதுவைக்கு தண்ணீர் கொண்டுவர சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்.

மேட்டூரில் கல்லணை வழியாக காரைக்காலுக்கு தண்ணீர் கொண்டுவரும் சாத்திய ங்களை ஆராய வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பின்னர் மத்திய குழுவினர் சங்கராபரணி ஆறு, ஆரியப்பாளையம், கோனேரிக்குப்பம், செல்லி ப்பட்டு, நோணாங்குப்பம், தென்பெண்ணை யாறு, மணமேடு, சோரியாங்குப்பம் பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். இந்த கூட்டத்தில் தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News