புதுச்சேரி

அரிச்சுவடி மைய இயக்குனர் இளவழகன் சபாநாயகர் ஏம்பலம் செல்வத்துக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்த காட்சி.

மனநல மைய 12-ம் ஆண்டு தொடக்க விழா

Published On 2022-06-21 14:00 IST   |   Update On 2022-06-21 14:00:00 IST
  • அரியாங்குப்பம் மணவெளியில் அரிச்சுவடி மனநல மையம் உள்ளது.
  • மையத்தில் 12-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது

புதுச்சேரி:

அரியாங்குப்பம் மணவெளியில் அரிச்சுவடி மனநல மையம் உள்ளது. இந்த மையத்தில் 12-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டார். மைய இயக்குனர் டாக்டா் இளவழகன், சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தை பூங்கொத்து கொடுத்து வரவேற்று சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி மரியாதை செய்தார். இதனை தொடர்ந்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கேக்வெட்டி ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

விழாவில் மனநலம் பாதிக்கப்பட்டோரின் கலை நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க வருங்கால தலைவர் சதிஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆத்திசூடி சிறப்பு பள்ளி தாளாளர் டாக்டர் சத்திய வாணன் நன்றியுரை கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பட்டை அரிச்சுவடி மனநல மைய ஊழியர்கள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News