புதுச்சேரி

சிந்தனையாளர் பேரவை சார்பில் 116-வது சிந்தனையரங்கம் நடைபெற்ற போது எடுத்த படம்.

எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு நினைவகம்-சிந்தனையாளர் பேரவை கோரிக்கை

Published On 2022-10-31 09:45 IST   |   Update On 2022-10-31 09:45:00 IST
  • சிந்தனையாளர் பேரவை சார்பில் 116-வது சிந்தனையரங்கம் நடைபெற்றது. புதுவை ஜோதி கண் மருத்துவமனை அரங்கில் மானுடத்தை நேசித்த மாமனிதர் கி.ரா. என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு சாரதா கங்காதரன் கல்லூரி பேராசிரியர் பிரபா தலைமை தாங்கினார்.
  • புதுவையின் பழமை புதுமை என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது.

புதுச்சேரி:

சிந்தனையாளர் பேரவை சார்பில் 116-வது சிந்தனையரங்கம் நடைபெற்றது. புதுவை ஜோதி கண் மருத்துவமனை அரங்கில் மானுடத்தை நேசித்த மாமனிதர் கி.ரா. என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு சாரதா கங்காதரன் கல்லூரி பேராசிரியர் பிரபா தலைமை தாங்கினார்.

பேரவை தலைவர் செல்வம் வரவேற்றார். துணை தலைவர் மணி மேகலை, பொருளாளர் சரஸ்வதி வைத்தியநாதன், துணை செயலாளர் ராஜாரங்கம், ஆலோசகர் ராமதாஸ் காந்தி, செயற்குழு உறுப்பினர் பச்சையம்மாள் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் கலியபெருமாள் சிறப்புரையாற்றினார். புதுவையின் பழமை புதுமை என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது. எழுத்தாளர்கள் பிரபஞ்சன், கி.ரா. ஆகியோருக்கு நூலகத்தோடு கூடிய நினைவகங்கள் அமைக்க வேண்டும்.

அரசு பணியிடங்களை மேல்நிலை தேர்வில் தமிழ் கட்டாயம் படித்த புதுவையில் பிறந்தோருக்கு தலா 50 சதவீதம் நேரடி மற்றும் துறை ரீதியான பதவி உயர்வு என்ற முறையில் நிரப்ப வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் செயற்குழு உறுப்பினர் திவ்யா நன்றி கூறினார்.

Tags:    

Similar News